ரிஷப் பந்த் புதிய சாதனை!

தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்PTI

தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் தில்லி கேப்பிட்டல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் தில்லி 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுக்க, குஜராத் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்களே சோ்த்தது.

ரிஷப் பந்த்
டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

இதில் தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் கேப்டன் 2ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருது பெருவது இதுவே முதல் முறையாகும்.

கார் விபத்திலிருந்து குணமடைந்து வந்த ரிஷப் பந்த் தனது அருமையான ஃபார்மினை மீண்டும் கொண்டு வந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com