பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

கொல்கத்தாவுக்கு எதிராக அபார வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!
Swapan Mahapatra

கொல்கத்தாவுக்கு எதிராக அபார வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 261 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 18.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் விளாசி வென்றது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமான சேஸிங் வெற்றியை இந்த ஆட்டத்தின் மூலம் பதிவு செய்து சாதனை படைத்தது பஞ்சாப். 

இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் கூறியதாவது:

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முக்கியமாக வெற்றி பெற்றுள்ளோம். கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவருகிறது. எங்களுக்கு கடந்த சில வாரம் கடினமான நாள்களாக இருந்தன. ஆனால் தாக்குப்பிடித்திருந்தோம்.

வீரர்களின் பயிற்சியும் பயிற்சியாளர்களின் நம்பிக்கையும் வீண்போகவில்லை. சிறிய ஆடுகளம்; ஈரப்பதம் வேறு இருப்பதால் சிக்ஸர் அடிக்க எளிதாக இருந்தது. ஜானி பேர்ஸ்டோ அற்புதமான ஆட்டம். சஷாங் சிங் இந்தத் தொடரின் சிறந்த கண்டுபிடிப்பு எனலாம்; ஆஷ்டதோஷுயும் இதில் சேர்க்கலாம். எங்களது வீரர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது.

பேஸ்பால் என்ற வார்த்தை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மெக்குல்லம் சேர்ந்த பிறகு இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தினால் உருவானதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com