டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை துரத்திப் பிடித்த அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.
ஷஷாங் சிங்
ஷஷாங் சிங்படம் | ஐபிஎல்

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை துரத்திப் பிடித்த அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பஞ்சாப் கிங்ஸ் பதிவு செய்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஷஷாங் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜானி பேர்ஸ்டோ 48 பந்துகளில் 108 ரன்களும், ஷஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

ஷஷாங் சிங்
ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

நேற்றைய ஆட்டத்தில் 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் வெற்றிகரமாக துரத்திப் பித்தது. ஆடவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணியால் துரத்திப் பிடிக்கப்படும் அதிகபட்ச இலக்கு இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு செஞ்சூரியனில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 259 ரன்களை துரத்திப் பிடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

படம் | ஐபிஎல்

வெற்றிகரமாக துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள் (ஆடவர் டி20 போட்டிகளில்)

பஞ்சாப் கிங்ஸ் - 262 ரன்கள் - கொல்கத்தாவுக்கு எதிராக, 2024

தென்னாப்பிரிக்கா - 259 ரன்கள் - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, 2023

மிடில்செக்ஸ் - 253 ரன்கள் - சர்ரேவுக்கு எதிராக, 2023

ஆஸ்திரேலியா - 244 ரன்கள் - நியூசிலாந்துக்கு எதிராக, 2018

பல்கேரியா - 243 ரன்கள் - செர்பியாவுக்கு எதிராக, 2018

முல்தான் சுல்தான்ஸ் - 243 ரன்கள் - பெஷாவருக்கு எதிராக, 2023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com