
சேப்பாக்கத்தில் இன்று ஜடேஜாவுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் விளையாடும் இன்றைய ஆட்டத்தில் ஜடேஜாவுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தவுள்ளனர்.

கடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜாவுக்கு ரசிகர்கள் இன்று மரியாதை செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. மழை அடிக்கடி குறுக்கிட்டதால் 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜடேஜா சிக்ஸர், பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
இந்த பரபரப்பான ஆட்டத்தின் வெற்றித் தருணம் இன்றுவரை சென்னை ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - குஜராத் இடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை ரசிகர்கள் ஜடேஜாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவுள்ளனர்.
இன்றைய ஆட்டத்தை நேரில் காண வரும் ரசிகர்கள், ஆட்டத்தில் 8-வது நிமிடத்தில், அதாவது சரியாக 7.38 மணிக்கு தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஜடேஜா, ஜடேஜா என்று கோஷமிட கோரி இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றது.
**Dear Chepauk Crowd ð**
— DHONI Trends⢠(@TrendsDhoni) March 26, 2024
At exactly ð³:ð¯ð´ ð£ð , during the eighth minute of tonight #CSKvsGT match, ð²ðð²ð¿ðð¼ð»ð² ððð®ð»ð± ð®ð ðð¼ðð¿ ðð²ð®ðð ð®ð»ð± ð°ðµð²ð²ð¿ ð³ð¼ð¿ ð®ð¬ð®ð¯ ðð¶ð»ð®ð¹s ðð²ð¿ð¼, Ravindra Jadeja. JADDUU JADDUU
#WhistlePodu @imjadeja pic.twitter.com/QMwL9h7j0D
ஜடேஜாவின் ஜெர்ஸி நம்பர் 8 என்பதால், சரியாக 8-வது நிமிடத்தில் ரசிகர்கள் மரியாதை செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






