ரச்சின்... ரச்சின்... ஆர்ப்பரித்த சிஎஸ்கே ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரச்சின் ரவீந்திராவின் அதிரடியாக ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
பந்தை சிக்ஸருக்கு விளாசும் ரச்சின் ரவீந்திரா
பந்தை சிக்ஸருக்கு விளாசும் ரச்சின் ரவீந்திரா
Updated on
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரச்சின் ரவீந்திராவின் அதிரடியாக ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சிஎஸ்கே முதலில் பேட் செய்து வருகிறது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திர அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசிய அவர் அதிரடியான ஆட்டத்தால் மிரட்டினார். அவர் 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

10 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் சிஎஸ்கே 104 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com