ஹைதராபாத் - மும்பை போட்டியின் ஹைலைட்ஸ் விடியோ!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் - மும்பை போட்டியின் ஹைலைட்ஸ் விடியோ!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 277/3 ரன்களைக் குவித்து ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே அதிக ரன்களை எடுத்த அணி என்ற சாதனையை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், பெங்களூர் அணி கடந்த 2013-இல் புணே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிகழ்த்தி இருந்த 263 ரன்கள் சாதனையை முறியடித்தது ஹைதராபாத்.

இந்தப் போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 38 சிக்ஸர்கள்: இரு அணிகளையும் சேர்த்து மொத்தம் 38 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. முந்தைய சாதனையாக 33 சிக்ஸர்களே இருந்தது.

ஒரே ஆட்டத்தில் 523 ரன்கள்: ஐபிஎல் தொடரின் 17 ஆண்டுகள் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் இரு அணிகளின் ஸ்கோர்களை சேர்த்து மொத்தம் 523 ரன்கள் விளாசப்பட்டன.

இந்தப் போட்டியைக் காணத் தவறியவர்கள் ஹைலைட்ஸ் விடியோவில் காணலாம்.

ஹைலைட்ஸ் விடியோவுக்கு இந்த லிங்கினை க்ளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com