ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?
படம் | AP

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்குப் பிறகு பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அந்த சாதனைகள் பின்வருமாறு:

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணிகள்

277/3 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2024 (மும்பைக்கு எதிராக)

263/5 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2013 (புணேவுக்கு எதிராக)

257/5 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், 2023 (பஞ்சாபுக்கு எதிராக)

248/3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2016 (குஜராத் லயன்ஸுக்கு எதிராக)

246/5 - சென்னை சூப்பர் கிங்ஸ், 2010 (ராஜஸ்தானுக்கு எதிராக)

246/5 - மும்பை இந்தியன்ஸ்,2024 (ஹைதராபாத்துக்கு எதிராக)

ஒரு ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரிகள் (ஃபோர்ஸ் & சிக்ஸ்)

69 பவுண்டரிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ், 2010 (ராஜஸ்தானுக்கு எதிராக)

69 பவுண்டரிகள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், 2024 (மும்பைக்கு எதிராக)

67 பவுண்டரிகள் - பஞ்சாப் கிங்ஸ், 2023 ( லக்னௌக்கு எதிராக)

67 பவுண்டரிகள் - பஞ்சாப் கிங்ஸ், 2018 ( கொல்கத்தாவுக்கு எதிராக)

65 பவுண்டரிகள் - டெக்கான் சார்ஜர்ஸ், 2008 ( ராஜஸ்தானுக்கு எதிராக)

ஐபிஎல் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய அணிகள்

21 சிக்ஸர்கள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2013 (புணேவுக்கு எதிராக)

20 சிக்ஸர்கள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2016 (குஜராத் லயன்ஸுக்கு எதிராக)

20 சிக்ஸர்கள் - தில்லி கேப்பிடல்ஸ், 2017 (குஜராத் லயன்ஸுக்கு எதிராக)

20 சிக்ஸர்கள் - மும்பை இந்தியன்ஸ், 2024 (ஹைதராபாத்துக்கு எதிராக)

18 சிக்ஸர்கள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2015 ( பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக)

18 சிக்ஸர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ், 2023 (கொல்கத்தாவுக்கு எதிராக)

18 சிக்ஸர்கள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், 2024 ( மும்பைக்கு எதிராக)

ஆடவர் டி20 போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள்

38 சிக்ஸர்கள் - ஐபிஎல் (மும்பை - ஹைதராபாத்), 2024

37 சிக்ஸர்கள் - ஏபிஎல் (பால்க் லெஜண்ட்ஸ் - காபூல்), 2018

37 சிக்ஸர்கள் - சிபிஎல்

ஐபிஎல் போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள்

38 சிக்ஸர்கள் - (மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்), 2024

33 சிக்ஸர்கள் - (ஆர்சிபி - சிஎஸ்கே), 2018

33 சிக்ஸர்கள் - (ராஜஸ்தான் ராயல்ஸ் - சிஎஸ்கே), 2020

33 சிக்ஸர்கள் - (ஆர்சிபி - சிஎஸ்கே), 2023

ஐபிஎல் போட்டி ஒன்றில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்

523 ரன்கள் - (மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), 2024

469 ரன்கள் - (சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ்), 2010

459 ரன்கள் - (பஞ்சாப் கிங்ஸ் - கேகேஆர்), 2018

458 ரன்கள் - (பஞ்சாப் கிங்ஸ் - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்), 2023

453 ரன்கள் - (மும்பை - பஞ்சாப் கிங்ஸ்), 2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com