லக்னௌ அணியிலிருந்து விலகிய ஆல்ரவுண்டர்; மாற்று வீரர் அறிவிப்பு!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லே விலகியுள்ளார்.
லக்னௌ அணியிலிருந்து விலகிய ஆல்ரவுண்டர்; மாற்று வீரர் அறிவிப்பு!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லே விலகியுள்ளார்.

டேவிட் வில்லேவுக்குப் பதில் லக்னௌவில் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய டேவிட் வில்லே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் லக்னௌ அணியால் ரூ. 1.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

லக்னௌ அணியிலிருந்து விலகிய ஆல்ரவுண்டர்; மாற்று வீரர் அறிவிப்பு!
ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக லக்னௌ அணியிலிருந்து டேவிட் வில்லே விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மாட் ஹென்றி
மாட் ஹென்றி

இந்த ஐபிஎல் தொடரில் லக்னௌ அணியிலிருந்து விலகும் இரண்டாவது இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளராக டேவிட் வில்லே இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் லக்னௌவிலிருந்து விலகினார்.

மாட் ஹென்றி ரூ.1.25 கோடிக்கு லக்னௌ அணியில் மாற்று வீரராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com