லக்னௌ அணியின் இளம் வீரர் மயங்க் யாதவ் இந்த ஐபிஎல் தொடரின் அதிவேகமான பந்தை வீசியுள்ளார். 157 கி.மீ/ மணி வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார்.
முதல் போட்டியில் 3 விக்கெட் 27 ரன்கள், 2வது போட்டியில் 3 விக்கெட் 14 ரன்கள் எடுத்து தனது முதல் 2 போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது வாங்கி அசத்தி வருகிறார் மயங்க் யாதவ்.
காயம் காரணமாக விளையாடமல் இருந்த மயங்க் யாதவ் நேற்றையப் போட்டியில் விளையாடினார். 3.1 ஓவரில் 1 விக்கெட் எடுத்து அசத்தினார். ஆனால் முந்தைய மாதிரி அவரால் வேகமாக பந்து வீச முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டதை பார்க்க முடிந்தது.
மும்பை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ அணி வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 3-ஆம் இடத்துக்கு முன்னேறியது.
இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம், “ மயங்க் யாதவ்-க்கு தசை கிழிந்துள்ளது. ஆனால் இது முதல்நிலை காயம்தான். 4 வாரத்தில் இது அவருக்கு 2வது காயம். அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவதில் சந்தேகம்தான். ஒருவேளை லக்னௌ ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றால் மட்டும் அவர் விளையாடுவார். ஆனால் தற்போதைக்கு அவர் விளையாடுவதில் சந்தேகமே.
பிசிசிஐ வேகப் பந்து வீச்சாளருக்கென தனியான ஒப்பந்தத்தில் விரைவில் இணையவுள்ளார். பின்னர் இவரது வளர்ச்சிகள் தொடர்ந்து கவனிக்கப்படும்.
இந்திய தேர்வுக்குழு மற்றும் தேசிய தேர்வுக்குழுவினர் இவரது முழு உடல் தகுதியினை பராமரிக்க முனைப்பு காட்டிவருகிறார்கள்” பிசிசிஐ அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.