தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

மாஸ்டர் படத்தின் பாணியில் பஞ்சாப் அணி சிஎஸ்கேவை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது.
தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!
படம்: பஞ்சாப் / எக்ஸ்

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது போட்டியில் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

முதலில் ஆடிய சிஎஸ்கே 162/7 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 17.5 ஓவரில் 163 ரன்கள் எடுத்து வென்றது.

இத்துடன் 5 முறை பஞ்சாப் அணி சிஎஸ்கேவை வென்று அசத்தியுள்ளது. அத்துடன் சேப்பாக்கத்தில் தொடர்ந்து 4 முறை சிஎஸ்கே அணியை பஞ்சாப் வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இதற்கு முன்பாக மும்பை அணி சேப்பாகத்தில் 5 முறை வென்று அசத்தியுள்ளது.

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!
டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் சிஎஸ்கே அணியை தமிழ்ப் படங்களின் மீம்ஸ்களால் கிண்டல் செய்து வருகிறது.

குறிப்பாக விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தின் காட்சிகளை பதிவிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.

போட்டியை வென்ற பிறகு மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி சொல்லும், “சோலி முடிந்தது” என்பதை பதிவிட்டு சிஎஸ்கே அணியை கிண்டல் செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி வெற்றிக்கு காரணம் தோனிதான் எனவும் கிண்டல் பதிவுகளை பதிவிட்டு வருகிறது.

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!
10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

சிஎஸ்கே அணி மீதமுள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com