
ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் படம் ரூ. 130 கோடி வசூலுத்துள்ளது.
இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் ஒரு ரீல்ஸ் செய்திருப்பார். அதில் சிரிப்பு ஒரு பக்கம், கோபம் மறு பக்கம் என இருக்கும்படி செய்திருப்பார். படத்துக்கு மட்டுமில்லாமல் இந்த ரீல்ஸுக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகின்றன.
சிஎஸ்கே அணியில் விளையாடும் பதிரானா, முஸ்தஃபிசூர் இந்த ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்திருக்கிறார்கள். இந்த ரீல்ஸுக்கு மிகவும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனும் ஆஸி. அணியின் கேப்டனுமாகிய பாட் கம்மின்ஸ் இந்த டிரெண்டிங்கில் இணைந்துள்ளார்.
நேற்றையப் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பாட் கம்மின்ஸ் ஆவேஷம் படத்தின் ரீல்ஸ் பாணியில் ரீல்ஸ் செய்துள்ளார். ”ஆரஞ்சு ஆர்மி மகிழ்ச்சி தானே? ” என ஹைதராபாத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
ஆவேஷம் படம் ஓடிடியில் மே.9ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.