பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்யும் விதமாக பஞ்சாப் கிங்ஸ் வெளியிட்ட பதிவுக்கு சிஎஸ்கே தக்க பதிலடி கொடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்யும் விதமாக பஞ்சாப் கிங்ஸ் வெளியிட்ட பதிவுக்கு சிஎஸ்கே தக்க பதிலடி கொடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 167 ரன்கள் குவித்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!
பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

சிஎஸ்கே தனது கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் சிஎஸ்கேவின் தோல்வியை கிண்டல் செய்யும் விதமாக மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, “சோலி முடிந்தது” எனக் கூறும் புகைப்படத்தை வெளியிட்டது.

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸின் கிண்டலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸின் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியை (பஞ்சாப் கிங்ஸ்), விஜய் (சிஎஸ்கே) முறைப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தை சிஎஸ்கே ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி, ரசிகர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியை மீம்களால் திணறடித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com