மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்துள்ளது.
பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்படம் |ஐபிஎல்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன் ரைசர்ஸ் முதலில் பேட் செய்தது.

பாட் கம்மின்ஸ்
ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மயங்க் அகர்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, டிராவிஸ் ஹெட் மற்றும் நிதீஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. இருப்பினும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன்பின் நிதீஷ் ரெட்டி (20 ரன்கள்), க்ளாசன் (2 ரன்கள்), மார்கோ ஜேன்சன் (17 ரன்கள்), ஷாபாஸ் அகமது (10 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறிது அதிரடி காட்டினார். அவர் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சன் ரைசர்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பாட் கம்மின்ஸ்
எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com