சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் சஞ்சு சாம்சனை புகழ்ந்து பேசியுள்ளார்.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்PTI

தில்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தாலும் சஞ்சு சாம்சனின் பேட்டிங் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன.

சாம்சன் ஆட்டமிழந்ததும் 3ஆம் நடுவரின் தீர்ப்பும் சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன.

இந்த ஐபிஎல் தொடரில் சாம்சன் 11 போட்டிகளில் 471 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் வரிசையில் 3ஆவது இடத்தில் இருக்கிறார். சராசரி 67.29. ஸ்டிரைக் ரேட் 163.54 ஆகும். டி20 உலகக் கோப்பை அணியிலும் சாம்சன் தேர்வாகியுள்ளார்.

சஞ்சு சாம்சன்
பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

“46 பந்துகளில் 86 ரன்கள் என சஞ்சு சாம்சன் தனது கனவு இன்னிங்ஸை விளையாடி வருகிறார். இந்தத் தொடர் முழுவதுமே சுழல் பந்துகள், வேகப் பந்துகளை தனது உடல் பலத்தினால் அருமையாக விளையாடுகிறார்.

சாம்சன் ஃபிட்ன்ஸில் நல்ல உடல் பலத்தைப் பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் உடல் பலம் மிகவும் முக்கியம். அணிக்காக தனது முழு அர்ப்பணிப்பினை தருகிறார். அவருக்கு தேவையானது அதிர்ஷடம் மட்டுமே” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் புகழ்ந்து பேசியுள்ளார்.

வருண் ஆரோன், “சாம்சன் ஆஃப் சைட் வீசப்படும் மெதுவான பந்துகளை எளிதாக சிக்ஸர் அடிக்கிறார். தனது காலை நகர்த்தாமல் அடிக்கிறார். அதிசயமாக கலீல் அஹமது வீசிய பவுன்சரில் ஆட்டமிழந்தார். அதைத் தவிர்த்து அற்புதமாக ஆடி வருகிறார்” எனப் புகழாரம் சூட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com