
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், கட்டாய வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது சென்னை அணி.
ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர்கள் யஜஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களும், ஜோஸ் பட்லர் 21 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சஞ்ஜு சாம்சன் 15 ரன்களுக்கு நடையைக் கட்ட, நிலைத்து நின்று ஆடிய ரியான் பராக் 47 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சிமர்ஜீத் சிங் 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.