
ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்பு வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இம்பாக்ட் பிளேயர் விதிமுறை கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஒரு அணியினால் அதிக ரன்கள் அடிக்க முடிகிறது.
இதனை எதிர்க்கும் விதமாக முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆர்சிபி வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் உள்ளிட்டோர் தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
ரோஹித் சொல்வதை நான் வழிமொழிகிறேன். என்டர்டெய்ன்மென்ட் ஒரு பகுதி என்றாலும் அது சமநிலையாக இல்லை. இந்த விதி போட்டியின் சமநிலையை குலைக்கிறது. இது எனக்கு மட்டுமல்லாமல் நிறைய பேருக்கு இதேபோல் தோன்றியிருக்கிறது. பந்து வீச்சாளர்கள் தாங்கள் என்ன செய்வதென்றே தெரியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பந்து வீச்சாளர்கல் எல்லா பந்துகளும் பவுண்டரிகள், சிக்ஸர்கள் தருவார்களென நான் எப்போதும் நினைத்ததில்லை. எல்லா அணியிலும் பும்ராவோ, ரஷித் கானோ இருப்பதில்லை. கூடுதல் பேட்டர்களால் மட்டுமே நான் பவர்பிளேவில் 200க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் ஆட வேண்டியிருக்கிறது.
பேட்டர்களுக்கும் பௌலர்களுக்கும் சமநிலை நிலவ வேண்டும். யாரும் அதிகாரத்தை செலுத்துவதாக இருக்கக்கூடாது. ஜெய் ஷாவும் இது குறித்து பேசியுள்ளதை கவனித்தேன். இதை சரிசெய்து போட்டியில் சமநிலையை உருவாக்குவார்கள் என நம்புகிறேன். பேட்டராக இந்த விதி நன்றாக இருக்கிறது. ஆனால் போட்டியில் சுவாரசியம் வேண்டும். 160 ரன்களை கட்டுப்படுத்துவதும் சுவாரசியம்தான் எனக் கூறினார்.
இன்று (மே.18) இரவு சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.