
வீரர்களின் தனிப்பட்ட உரையாடலை ஒளிபரப்பவில்லை என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, ஐபிஎல் ஒளிபரப்பாளர்கள் வீரர்களின் தனிப்பட்ட உரையாடலை பதிவு செய்து அதனை ஒளிபரப்பு செய்வதாக கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் விமர்சனத்தை மறுக்கும் விதமாக வீரர்களின் தனிப்பட்ட உரையாடலை ஒளிபரப்பவில்லை என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மே 16 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மா அவரது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் விடியோ பதிவு செய்யப்பட்டது. அவரது உரையாடலின் ஆடியோ பதிவு செய்யப்படவும் இல்லை, அதனை ஒளிபரப்பவும் இல்லை. அந்த விடியோவில், ரோஹித் சர்மா ஆடியோவை தயவு செய்து பதிவு செய்யாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார். அதைத் தவிர்த்து வேறு எந்த ஒரு ஆடியோவும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.