
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னௌ அணி.
18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 13-வது போட்டி லக்னௌவில் உள்ள எக்கானா மைதானத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி, லக்னௌ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியதும் முதல் பந்திலேயே மார்ஷ் ரன் ஏதுமின்றி வெளியேறினார்.
தனது பங்குக்கு எய்டன் மார்க்ரம் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்து வெளியேற, கேப்டன் ரிஷப் பந்தும் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 5 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 44 ரன்களிலும், ஆயுஸ் பதோனி 1 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
டேவிட் மில்லர் 3 பவுண்டரியுடன் 19 ரன்களிலும், இறுதிகட்டத்தில் களத்திற்கு வந்த அப்துல் சமத் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் 27 ரன்களிலும் வீழ்ந்தனர்.
முடிவில், லக்னௌ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன், க்ளென் மேக்ஸ்வெல், மார்கோ யான்சென், சஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.