
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர் டிராவிஸ் ஹெட் முதல் பந்தில் பவுண்டரி அடிக்க 2ஆவது பந்திலேயே வைபவ் அரோரா பந்தில் ஆட்டமிழப்பார்.
இதனால் கொல்கத்தா திடலே ஆர்ப்பரித்து கூச்சலிட்டது. இது வெறுமனே கேகேஆர் ரசிகர்களின் கூச்சலாக இருக்க வாய்ப்பில்லை என்றே கணிக்கப்படுகிறது.
ஏன் இவ்வளவு கூச்சல்?
இந்தியாவுக்கு எதிராக முக்கியமான ஐசிசி தொடர்களில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்திருக்கிறார்.
இதனால் இந்தியர்கள் பலருக்கும் டிராவிஸ் ஹெட் மீது வெறுப்பு இருக்கிறது.
சில இந்தியர்கள் டிராவிஸ் ஹெட் மனைவியை இன்ஸ்டாகிராமில் அவதூறாக பேசியதும் கவனிக்கதக்கது. அதனால், இந்த வெற்றியை ரசித்து கொண்டாடினார்கள்.
அதிக சப்தம், ஆனால் வான்கடேவை விஞ்சவில்லை
இந்தாண்டு தோனியை வரவேற்பதைவிட (120 டெசிபல்) இந்த சப்தம் அதிகமாக இருந்தது.
டிராவிஸ் ஹெட் ஆட்டமிழப்புக்கு 125 டெசிபலை தாண்டிச் சென்றது.
ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை வான்கடே திடலில்தான் அதிக சப்தம் எழுப்பப்பட்டுள்ளது.
ஆர்சிபிக்கு எதிராக ரோஹித் சர்மா அடித்த சிக்ஸரின்போது 129 டெசிபல் ஒலித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.