
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஆல்-ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளில் பந்துவீசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதில் இலங்கையைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ் சன்ரைசர்ஸ் அணிக்காக நேற்றைய (ஏப்.3) போட்டியில் களமிறங்கினார்.
இந்தப் போட்டியில் 13ஆவது ஓவரில் முதல் பந்தினை வலது கையிலும் அதே ஓவரில் 3ஆவது பந்தினை இடது கையிலும் பந்துவீசுவார்.
இதில் இடது கையால் வீசிய பந்தில் அரைசதம் அடித்த ரகுவன்ஷி ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
பேட்டிங்கிலும் அசத்திய கமிந்து மெண்டிஸ் தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளார்.
சிறப்பான டெஸ்ட் பேட்டரான இவர் டி20 போட்டிகளில் களமிறங்கியிருப்பது இலங்கை ரசிகர்களுக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.