எதார்த்தமாக இருக்க வேண்டும்..! பேட்டர்களை குறைகூறிய பாட் கம்மின்ஸ்!

தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது...
பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்PTI
Published on
Updated on
1 min read

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற சன்ரைசர்ஸ் அணி இந்த முறை பிளே-ஆஃப்க்கு செல்லுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

நேற்றைய போட்டியில் கேகேஆர் உடன் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 16.4 ஓவர்களில் ஆல் அவுட்டாகி ரன் ரேட்டிலும் பின் தங்கியது.

போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:

பேட்டர்கள் சிந்திக்க வேண்டும்

இன்று எங்களுக்கு சிறப்பான இரவாக அமையவில்லை. ஒரு இன்னிங்ஸ் முடிந்த பிறகு இந்த ரன்களை அடிக்க முடியுமென்றே கருதினேன். இந்த ஆடுகளம் சிறப்பானதாகவே இருக்கிறது.

ஃபீல்டிங்கில் நிறைய கோட்டைவிட்டோம். நிச்சயமாக பேட்டிங்கிலும் அப்படியே நடந்தது.

ஹாட்ரிக் தோல்வி நல்லதல்ல. எதார்த்தமாக இருக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு முன்பு 280 ரன்கள் குவித்தோம். எங்களது பேட்டர்கள் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். ஆனால், வேறு மாதிரியான ஆப்ஷன்களை எடுக்கும்போது சிந்திக்க வேண்டும்.

ஃபீல்டிங்கில் முன்னேற வேண்டும்

குறிப்பாக எனக்கு ஃபீல்டிங்கில் சொதப்பியது பிடிக்கவில்லை. சில கேட்ச்சுகள், சில மிஸ் ஃபீல்டிங்குககளை ஒழிக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக பந்துவீச்சை குறைகூற முடியாது. இறுதியில் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். 3 ஓவர்கள் மட்டுமே சுழல்பந்துகளை வீசினோம். அதற்கு தேவை இல்லயென நம்பினேன்.

வேகப் பந்துவீச்சாளர்களுக்கு கட்டர்ஸ் நல்ல பயனளித்ததால் அதைப் பயன்படுத்தினோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com