அபராதத்துக்கு அஞ்சாத திக்வேஷ் ரதி..! மீண்டும் சர்ச்சையான கொண்டாட்டம்!
லக்னௌ அணியின் சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி மீண்டும் சர்ச்சையான வகையில் விக்கெட்டினை கொண்டாடியது பேசுபொருளாகியுள்ளது.
கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய (மார்ச்.8) போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்துள்ளது.
அடுத்ததாக கேகேஆர் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் 6.2ஆவது ஓவரில் சுனில் நரைன் விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார்.
வழக்கமாக தனது லெட்டர் பேட் கொண்டாட்டத்தை தற்போது திடலில் கொண்டாடியுள்ளார். ஏற்கனவே, 2 போட்டிகளிலும் இவர் இப்படி செய்ததற்காக 2 முறையும் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்துக்கு அஞ்சாத திக்வேஷ் ரதி
இதனால், அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமும், ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் சமீபத்தில் வழங்கப்பட்டிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் இதுபோன்று சைகை காண்பித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
விராட் கோலியிடம் வில்லியம்ஸ் இதேபோன்று வம்பிழுக்க அவரை விராட் கோலி தனது பாணியில் அடித்து துவைத்தது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், 3ஆவது முறையாகவும் திக்வேஷ் ரதி செய்தது பேசுபொருளாகியுள்ளது. இந்த முறையும் அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.