
முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 6ஆவது பந்துவீச்சாளர் வேண்டுமெனக் கூறியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 217/6 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பந்துவீச்சாளர்கள் மெதுவாக பந்துவீசியதால் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் போட்டியில் 5 வீரர்கள் மட்டுமே பந்துவீசினார்கள்.
இது குறித்து சஞ்சய் பாங்கர் கூறியதாவது:
அகமதாபாத் பிட்ச்சில் பந்து பேட்டிங் விளையாட நன்றாக இருந்தது. அந்த பிட்ச்சில் வேகத்துக்கும் பவுன்சர் வகையிலான பந்துகளுக்கும் உதவி இருந்தன. அதை ஜோஃப்ரா ஆர்ச்சர் நன்றாகப் பயன்படுத்தினார். தனித்து பந்து வீசினார்.
ஆர்ச்சரைத் தவிர்த்து 6ஆவது பந்துவீச்சாளர் இருந்திருந்தால் முக்கியமான பந்துவீச்சாளர்களுக்கு சிறிது அழுத்தத்தை குறைத்திருக்கலாம்.
இந்தமாதிரி பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில் பந்துவீச்சாளர்களுக்கு சிறிது அழுத்தம் இருக்கும் என்பதை நாம் உணரலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.