
தமிழக வீரர் சாய் சுதர்சன் பேட்டிங்கில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 273 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். 288 ரன்களுடன் நிகோலஸ் பூரன் முதலிடத்தில் இருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1,307 ரன்களை எடுத்துள்ளார். இதில் 9 அரைசதங்கள், 1 சதத்துடன் சராசரி 48.41ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்தி வரும் சாய் சுதர்சன் 141.61ஆக விளையாடுவது குஜராத் அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது.
சாய் சுதர்சன் நிகழ்த்திய சாதனைகள் என்ன?
1. டி வில்லியர்ஸ் சாதனை சமன்
ஒரே திடலில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸுடன் சமன்செய்துள்ளார்.
அதாவது அகமதாபாத் திடலில் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் சுதர்சன் 84*, 103, 74, 63, 82 ரன்கள் குவித்துள்ளார்.
இதற்கு முன்பாக ஏபிடி பெங்களூரில் 90*, 68, 69, 70*, 63 ரன்கள் எடுத்திருந்தார்.
2. அதிக சராசரியுள்ள பேட்டர்
ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்சம் 1,000 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அதிக சராசரியுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
சாய் சுதர்சன் - 48.41
டெவான் கான்வே - 47.90
கே.எல்.ராகுல் - 45.47
டேவிட் வார்னர் - 40. 42
ருதுராஜ் கெய்க்வாட் - 40.35