
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சிஎஸ்கே முதலில் பேட் செய்கிறது.
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பதிலாக ராகுல் திரிபாதி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முகேஷ் சௌதரிக்குப் பதிலாக அன்ஷுல் கம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்குப் பதிலாக மொயின் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.