
கேகேஆர் அணியின் ஆலோசகர் டிவைன் ப்ராவோவை நம்பிக்கைத் துரோகி என சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறியது வைரலாகி வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியைத் தவிர்த்து சிஎஸ்கே தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியுற்றன.
சிஸ்கேவின் கேப்டன் ருதுராஜ் ஜெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்தக் காரணத்தினால் மீண்டும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (ஏப்.11) சேப்பாக்கில் கேகேஆர் உடன் சிஎஸ்கே இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.
கேகேஆர் அணிக்கு டிவைன் ப்ராவோ ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். முன்னதாக சிஎஸ்கே அணியில் விளையாடிய அவர் பந்துவீச்சு பயிற்சியாளரகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், சேப்பாக்கில் தோனியைச் சந்திக்க வந்த ப்ராவோவை, “இதோ நம்பிக்கைத் துரோகி வந்துவிட்டார்” என சிரித்துக்கொண்டே கூறுவார்.
அதற்கு பிராவோ, “வாழ்க்கை மிகவும் மோசமானது” எனக் கூறுவார்.
பின்னர், சிஎஸ்கே வீரர் ஜடேஜாவை ப்ராவோ கட்டிப்பிடித்து பேசுவார். அடுத்து தோனியுடன் அடித்து பேசுவார். தோனியும் ப்ராவோவும் மிக நெருங்கிய நண்பர்கள். சகோதரர்கள் போல பழகுவார்கள்.
கேகேஆர் அணியில் இணையும் முன்பு தோனியிடம் ஆலோசித்ததாக ப்ராவோ பேட்டியில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.