எங்களது பேட்டிங்கை வைத்து பவர்பிளேவில் 60 ரன்களை அடிப்பதே கடினம்: தோனி

சேப்பாக்கத்தில் கேகேஆர் உடன் தோல்வியுற்றதற்கு சிஎஸ்கேவின் புதிய கேப்டன் தோனி கூறியதாவது...
எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனிபடம்: ஏபி
Published on
Updated on
1 min read

இந்த ஐபிஎல் சீசனில் முதல் போட்டியைத் தவிர தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது சிஎஸ்கே அணி. அதிலும் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் சேப்பாக்கத்தில் தோல்வியுற்றுள்ளது.

கேகேஆருக்கு எதிராக நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே 103/9 ரன்களை எடுத்தது.

கேகேஆர் அணி 10.1 ஓவரில் 107/2 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வரலாற்றுத் தோல்வி குறித்து சிஎஸ்கேவின் புதிய கேப்டன் தோனி கூறியதாவது:

எங்களுக்கு பார்ட்னர்ஷிப்பே அமையவில்லை

எங்கள் பக்கம் செல்லாத இரவுகளில் இந்த இரவும் இருக்கிறது. சவால் இருந்தது, நாங்கள் அந்தச் சவாலை ஏற்றுக்கொள்கிறோம். இன்று (ஏப்.11) எங்களது அணியில் அவ்வளவாக ரன்கள் இல்லை.

பொதுவாக சேப்பாக்கில் 2-ஆவது இன்னிங்ஸில் நாங்கள் பந்துவீசும்போது பந்து நின்று வரும். ஆனால், இன்று இங்கு முதல் இன்னிங்ஸில் அப்படி நடந்தது.

தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழும்போது தரமான சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது அழுத்தம்தான் உருவாகும்.

எங்களுக்கு பார்ட்னர்ஷிப்பே அமையவில்லை. சிறிது பார்ட்னர்ஷிப், பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நல்ல ஷாட்டுகளை அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பவர்பிளேவில் 60 ரன்களை எடுப்பதே சிரமம்

எது முக்கியமென்றால் பிட்ச்சின் சூழ்நிலையைப் பார்த்து விளையாட வேண்டும். சில போட்டிகளில் நன்றாக விளையாடினோம். உங்களது பலத்தை அறிந்து விளையாட வேண்டும்.

வேறு ஒருவரின் திறனுடன் உங்களை ஒப்பிடக் கூடாது. எங்களது தொடக்க வீரர்கள் நல்ல பேட்டர்கள். வழக்கமான கிரிக்கெட்டிங் ஷாட்டுகள் அடித்து ரன்களை எடுப்பார்கள். அவர்களால் பெரிதாக சிக்ஸர்கள் அடிக்க முடியாது.

ஸ்கோர் போர்ட்டை பார்த்து வெறுப்படையக் கூடாது. எங்களது பேட்டிங் வரிசைப் பார்த்தால் பவர்பிளேவில் 60 ரன்களை எடுப்பதே சிரமமாக இருக்கிறது.

பார்டனர்ஷிப் அமைத்து மிடில் ஓவர், கடைசி ஓவர்களில் அடித்து ஆடலாம். விக்கெட் விழுவதால் எங்களது மிடில் ஆர்டர்கள் வேறு மாதிரி விளையாடுகிறார்கள். அவர்களது அதிரடியை காலம் தாழ்த்துகிறார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com