ஐபிஎல் 2025-இல் அதிக ரன்கள்: முதலிடம் பிடித்த தமிழன் சாய் சுதர்சன்!

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த தமிழக வீரர் குறித்து...
சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்படம்: எக்ஸ் / குஜராத் டைட்டன்ஸ்.
Published on
Updated on
1 min read

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் சாய் சுதர்சன்.

தமிழகத்தைச் சேர்ந்த இவர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த போட்டியில் ஒரே திடலில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை சமன்செய்திருந்தார்.

அத்துடன் ஐபிஎல் தொடரில் 1,000 ரன்களுக்கு அதிகமாக அடித்தவர்களில் அதிகமான சராசரியுடன் சாய் சுதர்சன் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

இந்நிலையில், லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் அணி 7 ஓவர்கள் முடிவில் 67/0 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் சாய் சுதர்சன் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 300 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள்

1. சாய் சுதர்சன் - 303*

2. நிகோலஸ் பூரன் - 288

3. மிட்செல் மார்ஷ் - 285

4. அஜிங்க்யா ரஹானே - 204

5. ஜாஸ் பட்லர் - 202

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com