
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அசத்திய கேகேஆர் அணியின் சமீபத்திய போஸ்டர் வைரலாகி வருகிறது.
சேப்பாக்கில் கடந்த ஏப்.11இல் கேகேஆர் அணி சிஎஸ்கேவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது.
குறிப்பாக 61 பந்துகளை (10 ஓவர்கள்) டாட் பந்துகளாக (ரன் எடுக்காமல் இருக்கும்) மாற்றியுள்ளார்கள்.
இந்த மோசமான சாதனையை சொந்த சிஎஸ்கே ரசிகர்களே கிண்டல் செய்து வந்த நிலையில் தற்போது கேகேஆர் அணியும் கிண்டல் செய்துள்ளது.
கேகேஆர் தனது எக்ஸ் பக்கத்தில், “61 டாட் பந்துகள், 1098 மரங்கள் நடப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டு கேகேஆர் வீரர்கள் மரம் நடுவதுபோல போஸ்டரை வெளியிட்டுள்ளது.
புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.