
டி20 போட்டிகளில் 100-வது அரைசதம் விளாசி ஆர்சிபி வீரர் விராட் கோலி புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் சுற்றுக்கான 28-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 62 (4 பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாசி அசத்தினார்.
இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இதையும் படிக்க: விராட் கோலி - சால்ட் விளாசல்: ஆர்சிபிக்கு 4-வது வெற்றி!
டி20 போட்டிகளில் 386 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலிக்கு 100-வது அரைசதமாக அமைந்தது. இந்திய வீரர்களில் 100 அரைசதங்கள் விளாசிய ஒரேயொருவர், மொத்தமாக உலகளவில் 2-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார் கோலி.
டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள்
டேவிட் வார்னர் - 108
விராட் கோலி -100*
பாபர் அசாம் - 90
கிறிஸ் கெயில் -88
ஜோஸ் பட்லர் - 86
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.