
பெங்களூரில் நேற்றிரவு மழையின் காரணமாக 14 ஓவர்கள் போட்டியாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 95/9 ரன்கள் எடுத்தது.
ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். இதுதான் அவரது முதல் அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 98/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
தோல்வியிலும் ஆட்ட நாயகன் - 28ஆவது வீரர்
பொதுவாக வெற்றி பெற்ற அணியில் இருந்தே ஆட்ட நாயகன் விருது கிடைக்கும். ஆனால், இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியது டிம் டேவிட்தான் என அந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.
தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற டிம் டேவிட்டுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதுபோல் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 28 முறை நடைபெற்றுள்ளது.
2008 ஐபிஎல் போட்டியில் எஸ். கோஸ்வாமி முதல்முறையாக தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிம் டேவிட் படைத்த வித்தியாசமான சாதனை
ஒரு அணியின் ஒட்டுமொத்த ரன்களும் 100க்கு குறைவாக இருக்கும்போது ஒரு வீரர் அரைசதம் அடித்தது இதுவே முதல்முறை.
ஆர்சிபி அணியின் ஒட்டுமொத்த ரன்களைவிட 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக டிம் டேவிட் அடித்தார்.
இதற்கு முன்பாக முதல் பேட்டிங்கில் அணியின் குறைவான ரன்களின்போதும் அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார்.
டிம் டேவிட் -50* - 95/9 - 2025
விராட் கோலி - 56* - 106/2 - 2013
ஆண்ட்ரே ரஸ்ஸல் - 50* - 108/9 - 2019
ரியான் மெக்லாரென் - 51* - 112/8 - 2011
சாம் கர்ரண் - 52 - 114/9 - 2020
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.