2 பந்துகளில் 2 சிக்ஸர்கள்... ஆனாலும் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா!

அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மா புதிய சாதனையை நிகழ்த்த தவறவிட்டார்.
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மாபடம்: ஜியோ ஹாட்ஸ்டார்.
Published on
Updated on
1 min read

அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மா புதிய சாதனையை நிகழ்த்த தவறவிட்டார்.

வான்கடே திடலில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்தப்போட்டியில் ரோஹித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் வரலாற்றில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைய நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மயங்க் யாதவ் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்த ரோஹித் சர்மா அடுத்த இரண்டு பந்துகளில் ரன்கள் எடுக்காமல் டாட் செய்தார். 5ஆவது பந்தில் மெதுவாக வீசப்பட்ட பந்தில் ஆட்டமிழந்தார்.

5 சிக்ஸர்கள் தேவைப்பட்ட போது 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழந்து சாதனையை தவறவிட்டார். மும்பை அணி 9 ஓவர்களில் 89/2 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் கிறிஸ் ஜெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள்

1.கிறிஸ் கெயில் - 357 சிக்ஸர்கள் (மே.இ.தீ.வீரர்)

2. ரோஹித் சர்மா - 297 சிக்ஸர்கள் (இந்தியர்)

3. விராட் கோலி - 285 சிக்ஸர்கள் (இந்தியர்)

4. எம்.எஸ்.தோனி - 260 சிக்ஸர்கள் (இந்தியர்)

5. ஏபிடி வில்லியர்ஸ் - 251 சிக்ஸர்கள் (தெ.ஆ.வீரர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com