
ஐபிஎல் தொடரில் 14 வயதில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பிகார் முதல்வர் ரூ.10 லட்சம் பரிசளித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவா்களில் 209/4 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 15.5 ஓவா்களில் 212/2 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தானின் 14 வயது வீரா் வைபவ் சூா்யவன்ஷி, நடப்பு சீசனில் அதிவேக சதம் விளாசி சாதனைப் படைத்தாா்.
இந்தச் சிறுவனுக்கு பலரும் வாழ்த்துகளை குவித்துவரும் நிலையில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து ரூ.10 லட்சம் பரிசுத் தொகையையும் அளித்துள்ளார்.
இந்தப் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியதாவது:
ஐபிஎல் வரலாற்றில் 14 வயதில் சதமடித்த பிகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துகள். கடின உழைப்பு, திறமையினால் இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக மாறியுள்ளார். அனைவரும் இவரை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.
நான் இவரையும் இவரது தந்தையையும் 2024ஆம் ஆண்டு சந்தித்தேன். அப்போதே அவரது வருங்காலத்துக்கு வாழ்த்து கூறியிருந்தேன். ஐபிஎல் தொடரில் சதமடித்த பின்பு நானும் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்.
பிகார் அரசு சார்பில் இந்த இளம் பிகார் வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அளிக்கிறேன். வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்கு புதிய சாதனைகளை நிகழ்த்தவும் இந்திய நாட்டிற்கு புகழைச் சேர்க்கவும் வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.