

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஐபிஎல் போட்டியில் 49-ஆவது போட்டியில் சேப்பாக்கில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
மேக்ஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக புதிய வீரரை தேர்வு செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் இல்லையென தோனி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் : ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் கர்ரண், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா.
பஞ்சாப் கிங்ஸ் : பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்லீஷ், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் ப்ரார், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யன்ஷ் ஷெட்ஜ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்
புள்ளிப் பட்டியலில் 10-ஆவது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி இந்தப் போட்டியிலாவது வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.