
ஐபிஎல் 2025 தொடரின் இறுதி ஆட்டத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 1) அகமதாபாதில் நடைபெற்ற குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அகமதாபாதில் மழை பெய்ததால் 1 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகவே ஆட்டம் தொடங்கியது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 204 ரன்கள் என்ற கடின இலக்கை எட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியினர் கடுமையாகப் போராடினர். இதனால், அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் மட்டையை சுழற்றிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் மழை பொழிந்தார். அவர் 41 பந்துகளில் 8 சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 87 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் - 212) குவித்தார். இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் திரட்ட முடிந்தது.
இதன்மூலம், பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்ததுடன் முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதன்மூலம், ஏற்கெனவே 5 முறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணி, 6-ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியனாகும் வாய்ப்பை நழுவ விட்டது. முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன், நாளை(ஜூன் 3) அகமதாபாதில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப் கிங்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.