கோப்பை கனவு: கால்பந்து உலகில் நடக்கும் அதிசயம் ஆர்சிபிக்கும் நடக்குமா?

கால்பந்து உலகில் நடக்கும் அதிசயம் கிரிக்கெட்டிலும் தொடரும் என்பது குறித்து...
RCB qualifying IPL Final 2025. special poster for that. (pic from X, RCB)
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி அணி. படம்: எக்ஸ் / ஆர்சிபி
Published on
Updated on
1 min read

கோப்பையே வெல்லாத கால்பந்து அணிகள் எல்லாம் இந்த சீசனில் வெல்லும்போது ஆர்சியாலும் வெல்ல முடியுமென அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சீசனில் கால்பந்து உலகில் பல அணிகள் வரலாற்றுச் சாதனையாக கோப்பைகளை வென்று அசத்தி வருகின்றன.

குறிப்பாக டாட்டன்ஹம் ஹாட்ஸ்ஃபர், நியூகேஸ்டல் யுனைடெட், போலோக்னா, கிரிஸ்டல் பேலஸ், பிஎஸ்ஜி கோப்பைகளை வென்றுள்ளன.

இன்று பிஎஸ்ஜி அணி தனது முதல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது.

50,60 ஆண்டுகளுக்குப் பிறகெல்லாம் கோப்பையை வென்று அசத்தியிருக்கும் கால்பந்து அணிகள் போலவே 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், ஆர்சிபி ரசிகர்கள் இதேபோல் தங்களது அணியும் கோப்பையை வெல்லுமா என்ற ஆவலுடன் இருக்கிறார்கள்.

ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று (ஜூன்.1) இரவு 7.30 மணிக்கு குவாலிஃபயர் 2-இல் மும்பையும் பஞ்சாபும் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் வெல்லும் அணி ஜூன்.3ஆம் தேதி ஆர்சிபியுடன் இறுதிப் போட்டியில் மோதும். அதில் வெல்லும் அணியே சாம்பியனாக தேர்வாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com