Royal Challengers Bengaluru's Jitesh Sharma plays a shot during the Indian Premier League cricket final match between Punjab Kings and Royal Challengers Bengaluru at Narendra Modi Stadium in Ahmedabad
ஜிதேஷ் சர்மாபடம்: ஏபி

10 பந்துகளில் 24 ரன்கள்: ஆட்டத்தை மாற்றிய ஜிதேஷ் சர்மா!

ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மாவின் அதிரடி பேட்டிங் குறித்து...
Published on

நடப்பு ஐபிஎல்லின் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிலிப் சால்ட் 9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டைப் பறிகொடுக்க, அவருக்குப்பின்னர் வந்த மயாங் அகர்வால் நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தார்.

கேப்டன் ரஜத் படிதார் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டன் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

கைல் ஜேமிசன் வீசிய 17ஆவது ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்து ஜிதேஷ் சர்மா அசத்தினார். அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் ஆர்சிபி அணிக்கு கிடைத்தது.

ஆர்சிபியின் துணை கேப்டன் ஜிதேஷ் சர்மா வெறும் 10 பந்துகளில் 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஆர்சிபி வீரர்களில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்டான 240-இல் விளையாடி அசத்தினார்.

கடைசி ஆட்டத்திலும் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com