நரேந்திர மோடி திடலில் குவியும் ஆர்சிபி ரசிகர்கள்!

ஐபிஎல் இறுதிப் போட்டியைக் காண ஆர்சிபி ரசிகர்கள் குவிந்து வருவது குறித்து...
The venue where RCB and Punjab will clash in the final. (pic from X, IPl)
இறுதிப் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதும் திடல். படம்: எக்ஸ் / ஐபிஎல்
Published on
Updated on
1 min read

ஐபிஎல் இறுதிப் போட்டியைக் காண ஆர்சிபி ரசிகர்கள் நரேந்திர மோடி திடலில் குவிந்து வருகிறார்கள்.

அகமதாபாதில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிக்கு தற்போதே ரசிகர்கள் செல்லத் தொடங்கியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடங்கி இதுவரை ஒரு கோப்பையைக் கூட வெல்லாத இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கிறது.

விராட் கோலி ரசிகர்களும் ஆர்சிபி ரசிகர்கள் இந்தமுறை நிச்சயமாக கோப்பையை வெல்லும் கனவில் இருக்கிறார்கள்.

பஞ்சாப் அணியை முதல்முறையாக தலைமேற்று வழிநடத்தும் ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.

இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளில் 2-1 என ஆர்சிபி முன்னிலை வகிக்கிறது.

ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பது மட்டுமல்லாமல் இந்தமுறை கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.

ஆர்சிபி ரசிகர் ஒருவர் தனது உடலில் விராட் கோலியை பச்சைக் குத்திகொண்டு நரேந்திர மோடி திடலுக்கு முன்பாக ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com