நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெல்வது குறித்து முன்னாள் இந்திய வீரர் சேவாக் கூறியதாவது...
Virender Sehwag with his swag. (pic from X, sehwag)
வீரேந்திர சேவாக் படம்: எக்ஸ் / சேவாக்.
Published on
Updated on
1 min read

ஐபிஎல் இறுதிப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்ற கேள்விக்கு, “நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் எல்லாமே தோற்கின்றன. இறுதிப் போட்டியில் ஆர்சிபிக்கு ஆதரவு” என சேவாக் கூறியது பேசுபொருளாகியுள்ளது.

முன்னாள் இந்திய வீரர் சேவாக் ஐபிஎல் தொடரில் தில்லி, பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராகவும் சேவாக் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் பஞ்சாப்-ஆர்சிபி அணிகள் தயார் நிலையில் இருக்கும்போது சேவாக் கூறியது பேசுபொருளாகியுள்ளது.

கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கலந்துகொண்டு பேசிய நேர்காணல் ஒன்றில் சேவாக்கிடம் யார் இந்த ஐபிஎல் கோப்பையை வெல்லுவார்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சேவாக் கூறியதாவது:

ஆர்சிபி வெற்றிபெறுமென நினைக்கிறேன். இதற்கு முன்பாக நான் ஆதரவு தெரிவித்த அணிகள் எல்லாமே தோல்வியுற்று இருக்கின்றன. குவாலிஃபயர் 1, 2 என அனைத்திலுமே அப்படித்தான் ஆனது.

இந்திய அணிக்கும் நான் ஆதரவு தெரிவிக்கும்போது தோல்வியுற்றுள்ளது” எனக் கூறினார்.

கேள்வி கேட்கும் நெறியாளர் மீண்டும் ஒருமுறை யாருக்கு ஆதரவு எனக் கேட்க, “ஆர்சிபி” என சேவாக் புன்னகையுடன் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com