14 வயது சூர்யவன்ஷிக்கு கார் பரிசு..! யார்தான் ஓட்டுவார்கள்?

ஐபிஎல் தொடரில் கரை பரிசாகப் பெற்றுள்ள சூர்யவன்ஷி குறித்து...
The Curvv Super Striker of the Season award goes to Vaibhav Suryavanshi.
காரினை பரிசாக வென்ற சூர்யவன்ஷி. படம்: எக்ஸ் / ஐபிஎல்
Published on
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் காரினை பரிசாகப் பெற்றுள்ள சூர்யவன்ஷிக்கு இன்னும் 18 வயது நிறைவடையாத்தால் அந்தக் காரை யார் ஓட்டுவார்கள் என்ற சிக்கல் எழுந்துள்ளது.

14 வயதான வைபவ் சூர்யன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார்.

7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். அதிவேகம் சதம், அரைசதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் நிறைவு விழாவில் சூப்பர் ஸ்டிரைக்கர் விருது வென்றார். அதற்காக டாடா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை பரிசாகப் பெற்றார்.

ஏற்கனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் இவருக்கு பென்ஸ் காரை வழங்கியதாக தகவல்கள் வெளியாகின.

14 வயதாவதால் இந்தக் கார்களை அவர் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விருது விழாவில் ஹர்ஷா போக்லே இதைக் கிண்டல் செய்தார்.

இந்த விருது குறித்து வைபவ் சூர்யவன்ஷி, “நான் முதன்முதலாக எனது அம்மாவுக்குப் பரிசளிக்க போகிறேன்” எனக் கூறினார்.

இந்த சீசனில் முதல் போட்டிக்குப் பிறகு, “எனது அம்மா இரவு 11 மணிக்கு தூங்கி காலையில் 2 மணிக்கு எழுவார். எனது பயிற்சிக்காக உணவு தயாரிக்கவே இந்தமாதிரி கடினமாக எனது தாயார் உழைத்தார்” எனக் கூறியிருந்தார்.

இந்தக் காரை அவரது அம்மாவின் பெயரிலும் பென்ஸ்காரை அவரது பெயரிலும் பதிவு செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இரண்டையுமே அவரால் ஓட்டமுடியாது.

4 ஆண்டுகள் வரை வேறு யாராவதுதான் அவருக்காக ஓட்ட வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com