அதிர்ஷ்ட மந்திரம்: இறுதிப் போட்டிகளில் தோற்காத ஹேசில்வுட்!

ஆர்சிபியின் அதிர்ஷ்ட மந்திரம் ஜோஷ் ஹேசில்வுட் குறித்து...
𝐉𝐨𝐬𝐡 𝐡𝐚𝐬 𝐧𝐞𝐯𝐞𝐫 𝐥𝐨𝐬𝐭 𝐚 𝐓𝟐𝟎 𝐟𝐢𝐧𝐚𝐥.(pc from X, rcb)
ஜோஷ் ஹேசில்வுட்படம்: எக்ஸ் / ஆர்சிபி
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசில்வுட் (34) விளையாடியுள்ள அனைத்து இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ஹேசில்வுட் இருக்கிறார்.

இந்த சீசனில் ஆர்சிபிக்காக 12 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

பஞ்சாபின் தொடக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யாவை ஆட்டமிழக்க வைத்தார்.

இந்தியா-பாகிஸ்தான் போரின் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் பயிற்சிக்குக்கூட செல்லாமல் ஆர்சிபிக்கு கோப்பையை வென்றுதர இந்தியாவுக்கு வந்தார்.

குவாலிஃபயர்-1இல் 3 விக்கெட்டுகள் எடுத்து போட்டியை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.

சிஎஸ்கே அணியிலும் ஹேசில்வுட் கோப்பை வெல்ல காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹேசில்வுட் வென்ற இறுதிப் போட்டிகள்

2012 - சிஎஸ்டி20

2015 - உலகக் கோப்பை

2020 - பிக் பேஷ்

2021 - ஐபிஎல்

2021 - டி20 உலகக் கோப்பை

2023 - உலகக் கோப்பை

2025 - ஐபிஎல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com