பெங்களூர் கூட்டநெரிசல்: ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேர் கைது!

ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...
சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் பகுதியை ஆய்வு செய்யும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா.
சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் பகுதியை ஆய்வு செய்யும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா.PTI
Published on
Updated on
1 min read

பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில், 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முறையான முன்னேற்பாடுகள் இல்லாமல் பேரணிக்கு அனுமதி அளித்த மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சித்தராமையா, போதிய பாதுகாப்புகளை மேற்கொள்ளாத பெங்களூர் காவல் ஆணையர் தயானந்த் உள்பட 5 உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க முன்னாள் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில், ஆர்சிபி முதல் குற்றவாளியாகவும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்த டிஎன்ஏ நிறுவனம் இரண்டாவது குற்றவாளியாகவும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மூன்றாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், ஆர்சிபி மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் நிகில், டிஎன்ஏ நிறுவனத்தின் மேத்யூ, கிரண் மற்றும் வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com