Bengaluru stampede: Shankar and Jairam resign as secretary and treasurer of Karnataka State Cricket Association
கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் ராஜிநாமா.படம்: பிடிஐ, எக்ஸ் / கேஎஸ்சிஏ

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் ராஜிநாமா!

கூட்ட நெரிசலுக்கு பொறுப்பேற்று ராஜிநாமா செய்தவர்கள் குறித்து...
Published on

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளனர்.

ஆர்சிபி அணி முதல்முறையாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பெங்களூரு சின்னசாமி திடலில் கூட்டம் கூடியது.

இந்த நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தக் கூட்ட நெரிசலுக்குப் பொறுப்பேற்று கேஎஸ்சிஏ (கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்) தலைவரிடம் இதன் செயலாளர் ஏ. சங்கர், பொருளாளர் இ.எஸ். செய்ராம் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளனர்.

ஏற்கனவே, இந்த விவாகரத்தில் ஆர்சிபி மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் நிகில், டிஎன்ஏ நிறுவனத்தின் மேத்யூ, கிரண் மற்றும் வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு (ஜூன்.6) விராட் கோலி மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜிநாமா ஏன்?

ராஜிநாமா கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கடைசி 2 நாள்களுக்கு முன்பாக யாரும் எதிர்பார்க்காத, பரிதாபமான நிகழ்வு ஏற்பட்டது. இதில் எங்களது பொறுப்பு மிகவும் குறைவானது எனினும் தார்மீகப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகுகிறோம் எனக் கூறியுள்ளார்கள்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரகுராம் கேஎஸ்சிஏவின் தலைவராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 202-இல் ஒருமனதாக போட்டியின்றி செயலாளர், பொருளாளர் வென்றிருந்தனர். இந்த இடங்களுக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறுமென கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com