நானும் மயானத்திலேயே தங்கிவிடுகிறேன்..! ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தை வேதனை!

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தை மயானத்தில் கதறி அழுத நிகழ்வு குறித்து...
வெற்றிக் கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தையின் நெஞ்சை உலுக்கும் காட்சிகள்.
வெற்றிக் கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தையின் நெஞ்சை உலுக்கும் காட்சிகள். படங்கள்: எக்ஸ் / theskindoctor13
Published on
Updated on
1 min read

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தை ஒருவரின் வேதனையான செயல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் முதன்முதலாக கோப்பை வென்ற ஆர்சிபியின் மகிழ்ச்சியைக் கொண்டாடக் குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தார்கள்.

உயிரிழந்த 11 பேரில் பூமிக் லக்‌ஷ்மண் (21) என்ற இளைஞரின் தந்தை பிடி லக்‌ஷமண் தனது மகனை அடக்கம் செய்த இடத்தில் அழுதுகொண்டிருக்கும் காட்சிகள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

கர்நாடகத்தில், ஹாஸன் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

”எனது மகனுக்கு நடந்தது யாருக்குமே நடக்கக் கூடாது. நான் எங்கேயும் செல்ல விரும்பவில்லை. இங்கேயே தங்கிவிடுகிறேன்” எனக் கூறி மகனை புதைத்த இடத்திலேயே அழுத காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன.

ஆங்கில ஊடகத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு இருந்தது ஒரே ஒரு மகன்தான். அவனது உடலை துண்டாக்காதீர்கள்” என உடல் கூறாய்வின்போது கூறியுள்ளார்.

கார்நாடக பிஜேபி அரசு இது குறித்து காங்கிரஸை, “நீங்கள் புகைப்படம் எடுக்க விரும்பியதால் 11 குடும்பங்கள் தினமும் கண்ணீரை துடைத்துக்கொண்டு இருக்கிறது” எனக் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் ஆர்சிபி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக கிரிக்கெட் கழகத்தின் செயலாளர், பொருளாளர் ராஜிநாமா செயததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com