
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சஞ்சு சாம்சன் காயம் காரணமாக 3 போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு என்னானது?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பேட்டராக அணியில் சஞ்சு சாம்சன் தொடருவாரென அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான் போட்டியில் ஜொஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் விரலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சாம்சனுக்கு ஓய்வு தேவை
இந்த அறுவைச் சிகிச்சையினால் முதல் 3 போட்டிகளில் கீப்பிங், கேப்டன் பொறுப்பிலிருந்து சாம்சன் விலகுவதாகக் கூறப்பட்டுள்ளது.
என்சிஏவில் உள்ள மருத்துவர்கள் விக்கெட் கீப்பிங்கில் இருந்து சஞ்சு சாம்சனுக்கு சிறிது ஓய்வு தேவை என அறிவுறுத்தியுள்ளார்கள்.
இம்பாக்ட் பிளேயர் விதியின்படி பேட்டராக மட்டுமே சாம்சன் தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
இளம் வயதில் கேப்டன்
23 வயதாகும் ரியான் பராக் தற்போது இளம் கேப்டனாக இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறார்.
இதற்கு முன்பு விராட் கோலி 22 வயதில் ஆர்சிபி அணியை தலைமை ஏற்றது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி ஆட்டத்தில் ரியான் பராக் அரைசதம் அடித்துள்ளார். பேட்டிங், ஃபீல்டுங்கில் அசத்தும் பராக் பந்துவீசுவதும் குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மார்ச்.23இல் எதிர்கொள்ளவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.