
ஐபிஎல் கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக பஞ்சாப் கிங்ஸ் அணியினர் சிறப்புப் பூஜையில் ஈடுபட்டனர்.
நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் கொல்கத்தாவில் நாளை பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
அகமதாபாத்தில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப் கிங்ஸ்.
இந்த நிலையில், ஐபிஎல் கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தலைமையில் வீரர்கள் சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டனர்.
பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து வீரர்கள் பூஜையில் கலந்துகொண்ட புகைப்படங்களும் விடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணி கோப்பை வெல்லாத நிலையில், கடந்தாண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பை வென்றுகொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.