
ஆப்கன் வீரர் நூர் அஹமது சிஎஸ்கே ரசிகர்களிடம் தங்களது அணிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு பேசியுள்ளார்.
சிஎஸ்கே அணியில் முதல்முறையாக விளையாடும் நூர் அஹமது சிறப்பான சுழல் பந்துவிச்சாளராக இருக்கிறார்.
சேப்பாக்கில் ’ஸ்பின் டிரையோ’ எனப்படும் அஸ்வின், ஜடேஜா, நூர் அஹமது இருக்கிறார்கள். மேலும் ரச்சின் ரவீந்திராவும் அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனில் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலக ருதுராஜ் அந்தப் பொறுப்பை ஏற்றார்.
சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை இன்று மாலை 7.30 மணிக்கு சேப்பாக்கில் சந்திக்கிறது.
இந்நிலையில் நூர் அஹமது பேசியதாவது:
வணக்கம். அனைவருக்கும் நன்றாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஐபிஎல் என்பது நன்றாக தொடங்குவது முக்கியம்.
அதனால் உங்களது ஆதரவு எங்களுக்கு வேண்டும். போட்டியை ரசித்து பாருங்கள். சிஎஸ்கே அணிக்கு விசில் போடுங்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.