

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னௌ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட் செய்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய அதே பிளேயிங் வெலனுடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்குகிறது.
டாஸ் சுண்டும்போது பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், இன்றையப் போட்டியில் அதிக ரன்கள் குவிப்போம் என நம்புவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.