
தில்லிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் அவுட்டானார்.
இந்த ஐபிஎல் சீசனின் 10ஆவது போட்டியில் தில்லை எதிர்த்து தனது போட்டியில் சன்ரைசர்ஸ் தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது.
டாஸ் வென்ற கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார்.
இதில் முதல் பந்தில் அபிஷேக் ஒரு ரன் எடுக்க அடுத்த 2 பந்துகளில் டிராவிஸ் ஹெட் 2 பவுண்டரிகள் அடிப்பார்.
4ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க 5ஆவது பந்தில் டிராவிஸ் ஹெட் சிங்கிள் எடுக்க ஓடும்போது அபிஷேக் சற்று தாமதமாக ஓடியதால் தில்லி அணி வீரர் விப்ராஜ் நிகாம் பந்தினைப் பிடித்து ஸ்டம்பில் அடித்தார்.
அதிரடி வீரர் அபிஷேக் சர்மா 1 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 2.3 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 25/3 ரன்கள் எடுத்துள்ளது.
மிட்செல் ஸ்டார்க் ஓவரில் இஷான் கிஷன், நிதீஷ் குமார் ரெட்டி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.