நடுவர்களுடன் வாக்குவாதம் ஏன்? ஷுப்மன் கில் விளக்கம்!

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் நடுவர்களுடன் ஷுப்மன் கில் வாக்குவாதம் செய்தது குறித்து...
நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷுப்மன் கில்.
நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷுப்மன் கில். படங்கள்: ஜியோ ஹாட்ஸ்டார்.
Published on
Updated on
1 min read

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் நடுவருடன் ஷுப்மன் கில் வாக்குவாதம் செய்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அகமதாபாத் திடலில் நடந்த நேற்றைய (மே.2) போட்டியில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 224/6 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் 20 ஓவா்களில் இழந்து 186/6 ரன்களே சோ்த்தது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்க, ஹைதராபாத் அந்த வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

முதலில் குஜ்ராத் பேட்டிங்கின்போது ஷுப்மன் கில் ரன் அவுட் என 3-ஆம் நடுவர் கூறியது சர்ச்சையானது.

பின்னர், பந்துவீச்சில் 13.4ஆவது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்துக்கு எல்பிடபில்யூ கொடுக்கப்படவில்லை என குஜராத் சார்பில் ரிவிவ் எடுக்கப்பட்டது.

இம்பாக்ட் அம்பயர்ஸ் காலில் இருந்ததால் நாட் அவுட் எனக் கொடுக்கப்பட்டது. இதனால் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் களத்தில் இருந்த நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரே நாளில் இரண்டுமுறை இப்படியானதுக்கு ஷுப்மன் கில் மீது பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து போட்டிக்குப் பின்னர் ஷுப்மன் கில், “எனக்கும் நடுவர்களும் சில உரையாடல்கள் இருந்தன. சில நேரங்களில் நீங்கள் 110 சதவிகித உழைப்பினைக் கொடுக்கும்போது உணர்ச்சிகள் மிகுதியால் இப்படி நடக்கும்” என்றார்.

புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 2-ஆம் இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போதைக்கு முதலிடத்தில் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com